வரும் உத்தர பிரதேஷ் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி காங்கிரஸ் கட்சி முடிவு.
இந்த வருடம் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதிக சட்டசபை தொகுதிகள் கொண்ட உ.பி,. மாநிலத்தில் அனைவரின் கவனம் இருக்கிறது. இந்நிலையில் உ.பி., சட்டசபை தேர்தலை ஆளும் சமாஜ்வாதியுடன் இணைந்து எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-
உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து எதிர்கொள்ளும். கூட்டணி குறித்த விபரங்கள், தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் இன்னும் இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
காங்கிரசுடன் கூட்டணி தொடர்பான முடிவு இன்னும் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். மதவாத சக்திகளை எதிர்க்கவே காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாகவும் அவர் கூறினார்.
Details about it will be decided in coming days, for now can say there will be Cong-SP alliance under leadership of Akhilesh Yadav: GN Azad pic.twitter.com/NgBVbb8gQf
— ANI UP (@ANINewsUP) January 17, 2017