டெல்லி சேவைகள் மசோதா இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல்... காத்திருக்கும் அதிரடிகள்!

டெல்லி சேவைகள் மசோதா: ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2023, 09:17 AM IST
  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எளிதாக நிறைவேறியது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மே நாட்களில் தில்லியில் சேவைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது.
டெல்லி சேவைகள் மசோதா இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல்... காத்திருக்கும் அதிரடிகள்! title=

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) ராஜ்யசபாவில் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023ஐ அறிமுகப்படுத்த உள்ளார். தேசிய தலைநகரில் சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த மே 19 அவசரச் சட்டத்தை மாற்றும் தில்லி சேவைகள் மசோதா, எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்த போதிலும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரி வரும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அவையில் இருக்குமாறு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன.

ராஜ்யசபாவில் காணப்படும் எண் விளையாட்டு

ராஜ்யசபாவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன, அதில் 8 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதாவது தற்போதைய பலம் 237 ஆக உள்ளது. இதனால், மேல்சபையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மறுபுறம், காங்கிரஸ் உட்பட ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி உறுப்பினர்களின் உறுப்பினர்கள் 105. ராஜ்யசபாவில் இப்போது NDA க்கு பெரும்பான்மை இல்லாத இடத்தில், இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாவுக்கு YSRCP மற்றும்பிஜூ ஜனதா தளம் (BJD) தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

மக்களவையில் நிறைவேறிய மசோதா

I.N.D.I.A கூட்டணி உறுப்பினர்களின் வெளிநடப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 3 அன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எளிதாக நிறைவேறியது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தொகுதியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி, மேல்சபையில் மசோதாவை எதிர்க்கும் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இந்த மசோதா குறித்து  I.N.D.IA தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, நாங்கள் இதற்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறினார்.

தில்லி சேவைகள் மசோதா
 
 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மே நாட்களில் தில்லியில் சேவைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள், விதிமுறைகள் மற்றும் பிற சேவை நிபந்தனைகள் உட்பட தேசிய தலைநகர் டெல்லியின் அரசாங்கத்தின் விவகாரங்கள் தொடர்பாக விதிகளை உருவாக்க இந்த மசோதா மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை, குறிப்பாக மாநிலங்களவையில் கோரி வருகிறார். இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் என்று ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Indian Railways: சிக்கனத்தில் இறங்கும் ரயில்வே... பயணிகளுக்கு இதனால் பலன்கள் என்ன?

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தும்

டெல்லியின் உரிமைகளை வலுக்கட்டாயமாக பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் என்றார். புதிய எதிர்க்கட்சி கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் I.N.D.I.A (குறிப்பாக மாநிலங்களவையில்) தலைவர்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் கூடி அவையின் தளத்திற்கான வியூகத்தை வகுப்பார்கள். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மேலவைத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

மக்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா

தில்லி சேவை மசோதா தொடர்பாக  மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் மோதல் போக்கு நிலவுவதால், இந்த மசோதா முக்கியத்துவம் பெறுகிறது. மக்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா, மணிப்பூர் விவகாரம் குறித்து போராட்டம் நடத்துவதில் குறியாக இருந்த எதிர்கட்சிகள், மாசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்கவில்லை என்றும்கூறினார். எதிர்க்கட்சிகள் அமரும் பெஞ்சுகளை சுட்டிக்காட்டி பேசிய அமித் ஷா, டெல்லி தொடர்பான மசோதாவில் அவர்கள் பங்கேற்பதில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று கேட்டார். “தங்களது கூட்டணியைக் காப்பாற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் முன்னுரிமை. மணிப்பூரைப் பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை... ஒரு மாநிலத்தின் உரிமையைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் எந்த மாநிலம்? டெல்லி ஒரு மாநிலம் அல்ல, யூனியன் பிரதேசம்... டெல்லிக்கு சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது...’’ என்று அமித்ஷா கூறினார். மத்திய அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் வியாழன் அன்று, I.N.D.I.A  சேர்ந்த எதிர்க்கட்சிகள், நாட்டிற்காகவும், ஜனநாயகர்த்திற்காகவும் அல்ல... தங்கள் கூட்டணிக்காக மசோதாவை எதிர்க்க ஒன்றிணைந்துள்ளன என்றார்.

மேலும் படிக்க | Indian Railways இரவு நேர பயண விதிகளில் மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News