நேற்று பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து முதல் முறையாக உரையாற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். நாளை தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 5-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்டங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதால் பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு கடைசி பட்ஜெட் இதுவாகும்.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பொருளாதாரத்தை மையமாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா? ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். தொடந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலையில் ஏதாவது மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைவே இல்லை. தொடர்ந்து தினமும் அதிகரித்து வண்ணம் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருவால் விலைவாசியும் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் மாற்றம் வருமா? என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.