அனந்த்நாக் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினரால் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் நகரில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ரோந்து பணியும் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அனந்த்நாக் நகரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த என்கவுண்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளின் அடையாளம் காணும் பணி துவங்கியுள்ளனர்.
#Visuals from #JammuAndKashmir: Two terrorists have been gunned down in the encounter which started in Anantnag this morning. The encounter has concluded, combing operation is underway. (visuals deferred by unspecified time) pic.twitter.com/CR9G2Lzm6M
— ANI (@ANI) July 25, 2018
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மேலும் தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.
#JammuAndKashmir: Two terrorists have been gunned down in the encounter which started in Anantnag this morning. The encounter has concluded, combing operation is underway. The terrorists are yet to be identified. pic.twitter.com/reVmS0OkBc
— ANI (@ANI) July 25, 2018