சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதையும், இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும், தேச விரோத கருத்துக்களை பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், சமூக ஊடக தளங்கள் (Social Media) மற்றும் ஓடிடி (OTT) தளங்களுக்கும் புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவதற்கு சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் தொடர்பாக மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை ஏற்பது குறித்து பதிலளிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இணங்கவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் தொடர்ந்து செயல்பட, டிஜிட்டல் மீடியாவிற்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது. விசாரணையின் போது, ட்விட்டர் நிறுவனம் ஐ.டி விதிகளுக்கு இணங்குவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு, ட்விட்டர் இணங்கவில்லை என கூறியது.
ALSO READ | அடுத்த ஆறு நாட்களுக்கு வருமான வரி தாக்கல் இணையதளம் இயங்காது: எச்சரிக்கை
இந்திய அரசின் விதிமுறைகளை ட்விட்டர் ஏற்கிறதா அல்லது ஏற்கவில்லையா என்பது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறி ட்விட்டருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பேச்சு சுதந்திரத்திற்கு 'அச்சுறுத்தல்' ஏற்படும் சாத்தியக் கூறுகள் குறித்து ட்விட்டர் கவலைகளை எழுப்பியிருந்தது, மேலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் கருத்து சுதந்திரத்தை உள்ளன என கூறியது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக ஊடக தலமான, டிவிட்டர், இந்தியாவில் அதன் போக்கில் செயல்பட முயற்சிப்பதாகவும், இந்திய நாட்டின் சட்ட அமைப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் ட்விட்டரை கடுமையாக குற்றம் சாட்டியது.
ALSO READ | புதிய ஐடி விதிகளை கடைபிடிக்காமல் முரண்டு பிடிக்கும் ட்விட்டர்; அடுத்தது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR