திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், திருப்பதியில் நவ.13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி விஐபி தரிசனம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் 14ம் தேதி தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர்.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
எனவே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த 3 தினங்களுக்கு தரிசனம் மற்றும் அறைகள் பெறுவதற்கான முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட நாட்களில் நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கும் அறைகள் ஒதுக்கீடு கிடையாது. திருமலை திருப்பதி தேவஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (Tirumala Tirupati Devasthanam) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது.
திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR