மது, மாமிசத்தை ஏற்கும் கடவுள் காளி : சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் காளி என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 6, 2022, 03:36 PM IST
  • மது, மாமிசத்தை ஏற்கும் கடவுள் காளி
  • சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.
  • சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சை
மது, மாமிசத்தை ஏற்கும் கடவுள் காளி : சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.  title=

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பைப் பெற்றது.

அதில், காளி வாயில் சிகரெட்டுடனும், தன் பாலினத்தவர்களான எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடனும், மற்றொரு கையில் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் உள்ளபடி இருந்தது. இந்தப் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஒவ்வொரு நபரும் கடவுளை அவரவர் வழியில் வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, பூடான் அல்லது சிக்கிம் சென்றால், அவர்கள் பூஜை செய்யும் போது, ​​தங்கள் கடவுளுக்கு விஸ்கி கொடுக்கிறார்கள், உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று கடவுளுக்கு பிரசாதமாக விஸ்கி கொடுங்கள் என்று சொன்னால், அது தெய்வ நிந்தனை என்று சொல்வார்கள். 

மேலும் படிக்க | இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை அதிரடி

என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். தாராபித் (மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலம்) பகுதிக்குச் சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காண்பீர்கள். உங்கள் கடவுளை சைவமாகவும், வெள்ளை ஆடையாகவும் வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவு எனக்கும் சுதந்திரம் உள்ளது எனக் கூறினார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை அன்ஃபாலோ செய்துள்ளார்.

மேலும் படிக்க | காளி போஸ்டர்... இந்திய உயர்குழு ஆணையம் எடுத்த நடவடிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News