மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், கிரிஷ்ணகஞ்ச் தொகுதியின், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வா மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்,
சர்ஸ்வதி பூஜை-க்கான ஏற்பாடுகளில் இருந்த போது சத்யஜித் சுட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
சம்பவத்தை அடுதுத சத்யிஜித் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் எனவும், கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிர் பிறிந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Satyajit Biswas, Trinamool Congress (TMC) MLA from Krishnaganj, Nadia was shot dead. More details awaited. #WestBengal pic.twitter.com/juppcNvRIm
— ANI (@ANI) February 9, 2019
பிஸ்வாஸ் தனது தொகுதியில் ஒரு பிரபலமான அரசியல்வாதி ஆவார். சமூகம் சார்ந்த குழுக்களை வழிநடத்தி வந்த பிஸ்வாஸ் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சவாலாய் அமைந்தவர் என தெரிகிறது.
எனவே பிஸ்வாஸின் மரணத்திற்கு காரணம் பாஜக பிரமுகராக இருக்கலாம் என மேற்குவங்கம் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் தலைமை தெரிவிக்கின்றன. மேலும் அரசியல் லாபத்திற்கா இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் திரினாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
எனினும் இச்சம்பவத்திற்கும், பாஜக பிரமுகர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தேவையெனில் சிபிஐ விசாரணைக்கு ஆணை இட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.