தன்னிடம் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை எதிர்த்ததால் குத்தி கொல்லப்பட்ட வாலிபன்

பைக்கை திருட வந்த கொள்ளையர்கள், ஓட்டி வந்த வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2019, 02:08 PM IST
தன்னிடம் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை எதிர்த்ததால் குத்தி கொல்லப்பட்ட வாலிபன் title=

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள சாகர்பூர் பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மூன்று கொள்ளையர்கள் பெரும் துணிச்சலுடன் ஒருவரைக் கொன்றுள்ளனர். கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட நபர் முசாபர்நகரில் வசிப்பவர். அவர் சவுன்ட் ரெகார்டிங் பதிவு செய்யும் வேலை செய்து வந்தார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தகவல்களின்படி, மோனு தியாகி என்ற நபர் இன்று அதிகாலை 4 மணிக்கு தனது மாமாவின் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்றுக்கொண்டிருந்த வழியில் பதுங்கியிருந்த மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வந்து, அவரிடமிருந்து பைக்கை பறிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களை மோனு எதிர்க்கிறார். அதன் பின்னர் கொள்ளையர்கள் அவரை தாக்குகிறார்கள். பின்னர் இரண்டு கொள்ளையர்கள் அவரை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, மற்றொரு கொள்ளையன் மோனுவின் வயிற்றில் மற்றும் மார்பில் கத்தியால் குத்துகிறார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விடுகிறார். பின்னர் கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிடுகிறார்கள். இந்த காட்சி முழுவதும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. 

தனது பைக்கை திருடுகிறார்களே என எதிர்பு தெரிவித்ததால் மூன்று கொள்ளையர்கள் அவரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். சமீபமாக இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் அதிகரித்து வருகிறது என்பது வேதனையான விசியம் ஆகும். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Trending News