1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நவ்ஜோத் சிங் சித்துவும், அவரது நண்பர் ருபிந்தர் சிங் சந்துவும் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே சாலையின் நடுவில் தங்கள் ஜிப்சியை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் வந்த 65 வயதான குர்னாம் சிங் என்ற நபர் அவர்களை நகரச் சொல்லியதால், சித்துவும், அவரது நண்பரும் சாலையிலேயே வைத்து குர்னாம் சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், குர்னாம் சிங் உயிரிழந்த நிலையில், கடந்த 1999 செப்டம்பர் 22, அன்று பாட்டியாலாவின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, நவ்ஜோத் சிங் சித்துவை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க | பஞ்சாப் தேர்தலில் படுதோல்வி...பதவி விலகிய சித்து
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்தார். தனக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் முரணாக இருப்பதாக சித்து வாதாடியதைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு சித்து மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பின்னர் 2018-ம் ஆண்டு மே 15-ம் தேதி சித்துவை இந்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம் விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டுமென 2018-ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று, குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR