வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2021, 10:23 AM IST
வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு title=

மத்திய அரசு 2020ல் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம், பண்ணை சேவைகள் சட்டம், 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (அத்தியாவசியப் பொருட்கள்)  ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியதில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா 2021, (farm laws repeal bill) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நவம்பர் 19 அன்று மூன்று மத்திய விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) புதிய கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.

குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இந்த மிக முக்கிய முடிவை அறிவித்தார். இதை அடுத்து ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்த விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியது. 

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, (PM MODI) விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார். வேளாண் சட்டங்களை புரிந்துக் கொள்ளாததால் தான் பிரச்சனை, சில விவசாயிகளுக்கு அதன் நன்மைகளை புரிய வைக்க முடியவில்லை  என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ALSO READ | No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News