நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 07:35 PM IST
  • நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும்.
  • COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, பல விதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அசாதாரண சூழ்நிலை காரணமாக, இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்காது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது title=

கொரொனா பரவல் காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை  கூட்டத் தொடருக்காக விரிவான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் உறுப்பினர் உட்காரும் வகையில் இருக்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். 

அமர்வின் போது மாநிங்கள் அவை உறுப்பினர்கள் சேம்பர்கள் மற்றும் கேலர் ஆகிய இரண்டு இடங்களிலும் அமர்ந்திருப்பார்கள் மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. 1952 க்குப் பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுவது இதுவே  முதல் முறையாகும், 

மாநிலங்கள் அவையில், 60 உறுப்பினர்கள் சேம்பரிலும், 51 பேர் மாநிலங்களவையின் கேலரிகளிலும், மீதமுள்ள 132 பேர் மக்களவை சேம்பரிலும் அமர்வார்கள். மக்களவை செயலகமும் இதேபோன்ற இருக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்த விடுப்பு இல்லாமல் தொடர்ந்து இயங்கும். மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும் என்றும் அதன் தேதிகள் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூறியதாக பி.டி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதன்முறையாக,பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன்கள், புற ஊதா கிருமி நாசினிகள், இரு அவைகளுக்கும் இடையிலான சிறப்பு கேபிள் இணைப்புகள் மற்றும் பாலிகார்பனேட் தடுப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட உள்லது. ஜூலை 17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் அமர்வை நடத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகளை விரிவாக ஆராய்ந்த பின்னர், இரு அவைகளின் சேம்பர்கள் மற்றும் கேலரிகளை பயன்படுத்த முடிவு செய்தனர்.

ALSO READ | ₹5,999 விலையில் Gionee Max அசத்தல் Smartphone.. விபரம் உள்ளே..!!

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குள் அமர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்குமாறு திரு.வெங்கய்ய நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அசாதாரண சூழல் காரணமாக, ஒரு அவை காலை நேரத்திலும் ஒரு அவை இரவு நேரத்திலும் நடக்கும். இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்காது.

COVID-19 தொற்றுநோயால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக நிறைவு பெற்றது மேலும் இரு அவைகளும் மார்ச் 23 அன்று ஒத்திவைக்கப்பட்டன. ஒரு மர்வு முடிந்து அடுத்த அமர்வு ஆறு மாதங்கள் முடிவதற்குள்  கூட்டப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இருசக்கர வாகனங்கள் மீதான வரியைக் குறைக்கும் திட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முன்வைக்கலாம்

 

 

Trending News