CBI அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்....

CBI இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2018, 10:40 AM IST
CBI அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.... title=

CBI இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

CBI இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்டநடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் CBI  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் CBI  தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, CBI இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 

CBI இயக்குனர் விவகாரத்தில் தலையிட பிரதமருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை என்று அக்கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார். அதிகாலை 2 மணிக்கு திடீரென CBI இயக்குனரை மாற்ற வேண்டிய நிலைக்கு காரணம் என்ன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ளார். இது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால் தான் CBI இயக்குனர் ஆலோக் வர்மா மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இது தான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

Trending News