Telangana Elections: தெலங்கானாவில் கடும் போட்டி... முக்கிய வேட்பாளர்கள் யார் யார்...?

Telangana Elections 2023: தெலங்கானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரும் சூழலில், அதன் முக்கிய வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2023, 09:24 AM IST
  • தெலங்கானாவில் கே. சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் ஆட்சியில் உள்ளது.
  • சுமார் 9 ஆண்டுகளாக இந்த கட்சி ஆட்சியில் உள்ளது.
  • காங்கிரஸ் தற்போது முன்னிலை வகிக்கிறது.
Telangana Elections: தெலங்கானாவில் கடும் போட்டி... முக்கிய வேட்பாளர்கள் யார் யார்...? title=

Telangana Elections 2023: தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (டிச. 30) ஒரே கட்டமாக நடைபெற்றது. 119 தொகுதிகளில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் என பல்வேறு கட்சிகள் இதில் மோதினாலும், பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையேதான் ஆட்சியமைக்க கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. 

2014ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உதயமான பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தலில் பிஆர்எஸ் (அப்போது டிஆர்எஸ்) ஆட்சியமைத்தது. தற்போது வரை சுமார் 9 ஆண்டுகள் ஆட்சியை தொடர்கிறது. முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கடந்த முறை முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் விதமாக 2018ஆம் ஆண்டிலேயே ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் பிஆர்எஸ் 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளையும் கைப்பற்றியது. தொடர்ந்து, 2018இல் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், பிஆர்எஸ் 88 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 7 தொகுதிகளையும் கைப்பற்றின.

மேலும் படிக்க | சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023: ஆட்சிக்கு வரப்போவது யார்? மாநில வாரியாக முடிவுகள்!

கடந்த 2018 மக்களவை தேர்தலில் பிஆர்எஸ் 9 தொகுதிகளையும், பாஜக 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் வென்றிருந்தன. இடைத்தேர்தல்களிலும் பாஜக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரட்டை இலக்க தொகுதியை பெற பாஜக கடுமையான பரபரப்புரையை மேற்கொண்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த ஆந்திராவில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த நிலையில், சந்திரசேகர ராவ் எழுச்சி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியமைப்பு ஆகியவை தெலுங்கு பேசும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு குறைந்துவிட்டது எனலாம். ஆனால், தற்போது கேசிஆர் ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் காங்கிரஸ் அள்ளிவீசி உள்ள வாக்குறுதிகளால் தெலங்கானாவில் ஆட்சியமைத்து, அக்கட்சி தனது செல்வாக்கை மீட்டுருவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஆர்எஸ்

முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் கெஜ்வெல் தொகுதியிலும், கம்மாரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இவர் எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். குறிப்பாக, 1985ஆம் ஆண்டில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை சித்திபேட் தொகுதியிலல் ஆறு முறை எம்எல்ஏவாக தேர்வானார். 2014ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் கெஜ்வலில் இருந்து கேசிஆர் எம்எல்ஏவாக தேர்வானார். இவர் ஆறு எம்பியாகவும் இருந்துள்ளார். இதை தொடர்ந்து கேசிஆரின் மகனும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கேடி ராமா ராவ் சிர்சில்லா தொகுதியிலும், முதலமைச்சரின் உறவினர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் சித்திபேட் தொகுதியிலும், தலாசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சனத் நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி கோடங்கால் தொகுதியிலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்களை தொடர்ந்து, 
கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி, பொங்குலேடி சீனிவாச ரெட்டி மற்றும் மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் ஆகியோர் அதிகம் கவனம் பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவார்கள். மல்லு பாட்டி விக்ரமார்கா, நக்சலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய தன்சாரி அனசுயா என்ற சீதக்கா, புரட்சிக் கவிஞர் கதாரின் மகள் வெனேலா ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பாஜக, மற்றவை

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குமார், எடல ராஜேந்தர், தருமபுரி அரவிந்த், ரகுநந்தன் ராவ், அடிலாபாத் எம்பி சோயம் பாபு ராவ் மற்றும் வெங்கட ரமண ரெட்டி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.  சந்திரயான் குட்டா தொகுதியில் ஏஎம்ஐஎம்ஐ தலைவர் அக்பருதீன் ஓவைசி போட்டியிடுகிறார். 

பலத்த போட்டி

காமாரெட்டி தொகுதியில் கேசிஆர் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி மோதுகின்றனர். கேசிஆர் மோதும் மற்றொரு தொகுதியான கெஜ்வெலில், பாஜகவின் எடல ராஜேந்தர் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். ரேவந்த் ரெட்டி தனது சொந்த மண்ணான கோடங்கலிலும் போட்டியிடுகிறார், அங்கு அவர் பிஆர்எஸ் அமைச்சர் பட்னம் நரேந்தர் ரெட்டியை எதிர்த்து போட்டியிடுகிறார். 

மேலும் படிக்க | தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவி யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News