ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி நில மோசடி வழக்கு SC இன்று விசாரணை!!

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை!!

Last Updated : Feb 26, 2019, 08:48 AM IST
ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி நில மோசடி வழக்கு SC இன்று விசாரணை!! title=

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை!!

டந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 3 பிரிவினரம் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. 

அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. நீதிபதி போப்டே விடுப்பில் இருந்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோயி அக்சரா, வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புமீது 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்ற நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி வழக்கு 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இவ்வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். 

 

Trending News