மாநில அரசு ஒரு முடிவு எடுத்தால் ஆளுநர் ஏற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Supreme Court: அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2023, 06:47 PM IST
  • சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
  • ஆளுநர் கேட்கும் விவரங்களை மாநில அரசு வழங்க வேண்டும்.
  • மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட வேண்டும்.
மாநில அரசு ஒரு முடிவு எடுத்தால் ஆளுநர் ஏற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் title=

பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மற்றும் முதலமைச்சர் பக்வந்த் மான் ஆகியோருக்கு இடையிலான பட்ஜெட் அமர்வு தொடர்பான சர்ச்சை வழக்கு இன்று (பிப்ரவரி 28) உச்சநீதிமன்றத்தை எட்டியது. அதாவது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் ஆலோசனை குழு பஞ்சாப் மாநிலதில் மார்ச் 3 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என அனுமதி கோரி ஞ்சாப் ஆளுநராகவுள்ள பன்வாரிலால் புரோஹித்திடம் ஆவணங்கள் அளித்திருந்தனர். ஆனால், பஞ்சாப் மாநில ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தாமதப்படுத்தி வந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு:
இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் மாநில அரசு அவசர வழக்காக மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில் அரசியல் சாசன பிரிவு 174 படி சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இது ஆளுநரின் விதிமுறை மீறல் செயல் என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான அவசர வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டை சந்திரச்சூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

மேலும் படிக்க: இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?

ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது:
அப்பொழுது ஆளுநர் தரப்பில் ஆஜரானா சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, மார்ச் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தரப்பில் ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மாநில முதல்வர் எடுக்கும் முடிவுகள் குறித்து தகவல்களைத் தேட ஆளுநருக்கு உரிமை உண்டு. ஆளுநர் என்ன விவரங்களைக் கேட்கிறாரோ அதனை மாநில அரசு வழங்க வேண்டும். 

மாநில அரசுக்கு முடிவுக்கு ஆளுநர் உட்பட வேண்டும்:
அதேபோல் அமைச்சரவை குழு பட்ஜெட் அமர்வைக் கூட்ட முடிவு செய்து அனுமதி கேட்கும் போது, சட்ட ஆலோசனை பெற்றதற்கு பிறகு அனுமதி வழங்கப்படும் என்று ஆளுநர் கூறமுடியாது. அதேபோன்று அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட வேண்டும் எனக்கூறி மக்கள் நலன் சார்ந்த பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க: மனீஷ் சிசோடியா ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூட பாஜகவால் நிரூபிக்கமுடியாது: AAP சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News