எந்த நிபந்தனையும் இன்றி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு: தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்!!

உச்சநீதிமன்றம் இன்று மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2020, 02:58 PM IST
  • மகள்களுக்கு, எந்த நிபந்தனையும் இன்றி பெற்றோர் சொத்து மீது உரிமை உண்டு என்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
  • செப்டம்பர் 9, 2005 அன்று, 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுச் சட்டத்தின் முக்கிய திருத்தம் செய்யப்பட்டது.
எந்த நிபந்தனையும் இன்றி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு: தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்!! title=

புதுடில்லி: உச்சநீதிமன்றம் (Supreme Court) இன்று மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்து வாரிசு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டின் திருத்தத்தின்படி மகள்களுக்கு, எந்த நிபந்தனையும் இன்றி பெற்றோர் சொத்து மீது உரிமை உண்டு என்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005 நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், சொத்தில் பங்குள்ள நபர் இறந்திருந்தாலும், மகள்களுக்கு பெற்றோர் சொத்து (Parental Property) மீதான உரிமை அப்படியே இருக்கும்" என்று நீதிபதி அருண் மிஸ்ரா (Justice Arun Mishra) தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது.

தீர்ப்பை உச்சரித்த நீதிபதி மிஸ்ரா, மகள்கள் மற்றும் மகன்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தந்தை உயிருடன் இருந்தாலும் இல்லை என்றாலும், மகள்கள் வாழ் நாள் முழுவதும் சொத்தின் சரிசமமான துணை உரிமையாளராக இருப்பார்கள் என்று கூறினார்.

2005-ல் இந்து சட்டத்தில் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தந்தை இறந்திருந்தால், மகளுக்கு மூதாதையரின் சொத்துரிமை வராது என 2015 நவம்பரில் நீதிமன்றம் கூறியிருந்தது.

செப்டம்பர் 9, 2005 அன்று, 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுச் சட்டத்தின் (Hindu Succession Act) முக்கிய திருத்தம் செய்யப்பட்டது. முந்தைய சட்டம், பெண்களுக்கு மூதாதையரின் சொத்தில் வாரிசு உரிமையை மறுத்திருந்தது.  2005 ஆம் ஆண்டு வந்த திருத்தச் சட்டத்தில், மூதாதயர் சொத்தில் ஏற்படும் பகிர்வில், இந்து பெண் அல்லது மகளுக்கு அவளுடைய ஆண் உறவினர்களைப் போன்ற சமமான உரிமை கிடைக்கும் என மாற்றப்பட்டது. 

ALSO READ: பொதுவான பயணக் கொள்கையை முடிவு செய்ய டெல்லி, உ.பி,, ஹரியானாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Trending News