டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..!

மோடி அரசுக்கு பெரும் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது, மத்திய விஸ்டா திட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 11:49 AM IST
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..! title=

மோடி அரசுக்கு பெரும் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது, மத்திய விஸ்டா திட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது..!

புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட அனுமதி அளித்த நிலையில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டவும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய விஸ்டா திட்டம் (Central Vista Project) என்ற பெயரில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 900 முதல் 1,200 MP-கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது. அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5 ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7 ஆம் தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10 ஆம் தேதி பிரதமா் மோடி (Narendra Modi) அடிக்கல் நாட்டினாா்.

ALSO READ | Covaxin எடுத்துக்கொண்ட முதல் இந்திய பெண் Zee செய்தியாளர் பூஜா மக்கர்!

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. மேலும், ``கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு பாரம்பர்யப் பாதுகாப்புக்குழுவின் ஒப்புதல் தேவை. குழுவின் ஒப்புதல் பெற திட்ட ஆதரவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துகிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய விஸ்டா திட்டம் என்றால் என்ன

டெல்லியில் ராஜ்பாத்தின் இருபுறமும் உள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் இந்தியா கேட் அருகே ராஷ்டிரபதி பவனுக்கு அருகிலுள்ள பிரின்சஸ் பூங்காவின் பகுதி வருகிறது. மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டம் முழு பகுதியையும் புதுப்பிக்கும் மத்திய அரசின் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட உள்ளது. மக்களவையில் 876 இடங்களும், மாநிலங்களவையின் 400 இடங்களும், மத்திய மண்டபத்தின் 1224 இடங்களும் இருக்கும்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News