10% இடஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது!
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடும் அமளி மற்றும் எதிர்ப்புக்கிடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அரசுப் பணிகள் மற்றும் சேவைகளில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் அதற்கு மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து 4 வாரங்களில் விளக்கம் அளித்து அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பென்ச் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court also refuses to stay implementation of 10 per cent reservation to the economically weaker section of general category. A bench of CJI Ranjan Gogoi says “we will examine the issue.” https://t.co/nLEnpg2CyG
— ANI (@ANI) January 25, 2019