காஷ்மீர் மாநில ஸ்ரீநகரில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் கடந்த ஞாயிற்றுகிழமை தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஞாயிற்றுகிழமை(11-ம் தேதி) காஷ்மீர் மாநில ஸ்ரீநகரில் அமைத்துள்ள சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. அங்கிருந்த ராணுவ குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள் தீவிரவாதிகள்.
இந்த தாக்குதலில் இதுவரை 6 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி மற்றும் துணை முதல்வர் நிர்மல் சிங் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்..
Jammu: J&K CM Mehbooba Mufti meets family members of four Army personnel who lost their lives in #SunjuwanArmyCamp terror attack pic.twitter.com/kfZKwXnWAW
— ANI (@ANI) February 13, 2018
Jammu: J&K CM Mehbooba Mufti and Deputy CM Nirmal Singh at wreath laying ceremony of four Army personnel who lost their lives in #SunjuwanArmyCamp terror attack. Total six army personnel and one civilian had lost their lives and three terrorists were killed in the attack. pic.twitter.com/3jECPVDClU
— ANI (@ANI) February 13, 2018