காஷ்மீர் பல்கலை., வெளியே திடீர் குண்டுவெடிப்பு; 2 பேர் படுகாயம்..!

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பில் சிக்கி இரண்டு பேர் காயமடைந்தனர்!

Last Updated : Nov 26, 2019, 04:32 PM IST
காஷ்மீர் பல்கலை., வெளியே திடீர் குண்டுவெடிப்பு; 2 பேர் படுகாயம்..! title=

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பில் சிக்கி இரண்டு பேர் காயமடைந்தனர்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீர் என ஏற்பட்ட குண்டுவெடிப்பில்  இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஸ்ரீநகரில் காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த ஆரம்ப அறிக்கையின்படி, இது ஒரு கையெறி குண்டு வெடிப்பு என்று ஒரு சாட்சி கூறியுள்ளார். இருப்பினும், இது ஒரு கைக்குண்டு அல்லது பெட்ரோல் குண்டு என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக நவம்பர் 4 ஆம் தேதி, ஸ்ரீநகரில் உள்ள மௌ லானா ஆசாத் சாலையில் உள்ள ஒரு சந்தைக்கு அருகே லால் சௌக் பகுதியில் நடந்த கையெறித் தாக்குதலில் ஒருவர் பலியானார், 22 பேர் காயமடைந்தனர்.

ஆரம்ப அறிக்கையின்படி, மூன்று பயங்கரவாதிகள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர். அவர்கள் தான் இந்த சம்பவத்திர்க்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறார்கள். கைக்குண்டு தாக்குதல் நடந்தபோது ஸ்ரீநகரின் லால் சௌ பகுதியில் சாலையில் ஏராளமான பொதுமக்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக அக்டோபர் 28 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இக்பால் சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் குறைந்தது 19 பேர் காயமடைந்தது குறிப்பிடதக்கது.  

 

Trending News