டெல்லியில் வரும் நவ 12 வரை விடுமுறை. வரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் காசு மாறுபட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அதன் ஒட்டி உள்ள அனைத்து முதன்மை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டது.
இந்நிலையில் இன்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது. இது பெரும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருதி வரும் நவம்பர் 12-ம் தேதி வரை அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
इस आदेश के तहत दिल्ली के सभी सरकारी और प्राइवेट स्कूल, सभी क्लासेज, रविवार तक बन्द रहेंगे। https://t.co/28a2G0rIMW
— Manish Sisodia (@msisodia) November 8, 2017