பகீர் வீடியோ: கழிப்பறையில் பிரசவம்; டாய்லெட்டில் சிக்கிய குழந்தை

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2022, 02:26 PM IST
பகீர் வீடியோ: கழிப்பறையில் பிரசவம்; டாய்லெட்டில் சிக்கிய குழந்தை title=

சில நேரங்களில் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவங்கள் திடீரென நடக்கின்றன. அந்த வகையில், குஜராத்தில்  நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. 

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில்  நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் பிரசவம் தொடர்பானது. அந்த பெண் அகமதாபாத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்தவர்.

மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு படையினர் தொடர்ந்து குழந்தையை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்.

பச்சிளம் குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ

 

மேலும் படிக்க | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

முதற்கட்ட பரிசோதனையின் பின்னர் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News