பாஜக-வை சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லருடன் ஒப்பிடும் சிவசேனா...

சிவசேனா, தனது கட்சி செய்திதாளின்(Saamana) தலையங்கந்தில் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து, அதை ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளது. மேலும் ​​மகாராஷ்டிரா டெல்லியில் ஆட்சி செய்யும் மத்திய அரசின் அடிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Nov 10, 2019, 09:59 AM IST
பாஜக-வை சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லருடன் ஒப்பிடும் சிவசேனா... title=

சிவசேனா, தனது கட்சி செய்திதாளின்(Saamana) தலையங்கந்தில் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து, அதை ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளது. மேலும் ​​மகாராஷ்டிரா டெல்லியில் ஆட்சி செய்யும் மத்திய அரசின் அடிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாஜக-வைப் பற்றிய ஒரு மறைமுகமான சமனா குறிப்பில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அச்சத்தில் ஆட்சி செய்த கட்சி, குழப்பத்தில் விடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தின் முதல்வரகா தேவேந்திர ஃபட்னவிஸை தேர்ந்தெடுத்துவிட்டார், என்ற போதிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா விவகாரத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டிருப்பதால், ஃபட்னாவிஸால் இன்னும் முதல்வராக பதவியேற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

"மகாராஷ்டிராவின் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் சிவசேனா, வெளியேறும் முதலமைச்சருடன் பேசத் தயாராக இல்லை, இது பாஜகவின் மிகப்பெரிய தோல்வியாகும்" என்று தலையங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார் எனவும் இந்த பதிவு குறிப்பிட்டுள்ளது.

சிவசேனா மேலும் பாஜகவைத் தாக்கி, அச்சத்தின் அரசியல் நடத்தும் ஆளும் கட்சியால் கூட மாநிலத்தில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க இயலாது. அச்சம் என்னும் ஆயுதத்தால் ஆட்சி நடத்திய ஹிட்லர் இறந்துவிட்டார், அடிமைத்தனத்தின் நிழல் மறைந்துவிட்டது என்றும் பாஜக தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

டெல்லி காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையை மேற்கோள் காட்டியுள்ள சிவசேனா, டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஒரு பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நிலைமையைத் தவிர்க்க முடியவில்லை என்று உள்துறை அமைச்சகத்தை அவதூறாக பேசியுள்ளார். டெல்லியில், சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாலைகளுக்கு வந்து சட்டத்தை மீறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியின் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக பாழடைந்து அராஜகம் நிறுவப்பட்டு குழப்பத்திற்கு வழிவகுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த முழு வழக்கிலும், காவல்துறையினர் டெல்லி போலீஸ் கமிஷனரின் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை, வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று சமனா பதிவில் குறிப்பிட்டுள்ளது. டெல்லி இன்னும் ஒரு யூனியன் பிரதேசமாக உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டெல்லியில் எதையும் செய்யத் தவறிய மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளது எனவும் இந்த பதிவு குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்று கூறியுள்ள சிவசேனா தலையங்கம், மகாராஷ்டிராவின் அரசியல் மாநிலத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மத்திய அரசின் அடிமை அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், பாஜக, மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. நடந்து முடிந்த மாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56, ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54, மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றது. அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோர, ஒரு கட்சிக்கு 145 இடங்கள் தேவை. ஆனால் எந்தொரு கட்சியும் தனி பெருமை கொண்டிருக்காத நிலையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

161 ஒருங்கிணைந்த இருக்கை வலிமை கொண்ட பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை மகாராஷ்டிராவில் எளிதில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருக்க முடியும், ஆனால் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிளவு காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிகளும் கடும் மோதலில் அடைக்கப்பட்டுள்ளன. 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு அரசாங்கத்தை அமைக்க சிவசேனா விரும்புகிறது, ஆனால் சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என்று பாஜக தெளிவாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனி பெரும் கட்சியான பாஜக-விற்கு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், திங்கள்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

இருப்பினும், பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனாவின் உதவி தேவைப்படுகிறது. சிவசேனா ஆதரவு இன்றி பாஜக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில், 56 இடங்களைக் கொண்ட மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். சிவசேனா மற்றும் NCP இடையேயான கூட்டணி இறுதி செய்யப்பட்டால், கட்சி மொத்தம் 163 MLA ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிவசேனா (56), சுயேச்சைகள் (7), NCP (54), மற்றும் காங்கிரஸ் (44) MLA-க்கள் அடங்குவர்.

ஒருவேளை, சிவசேனாவும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், ஆளுநர் மூன்றாவது பெரிய கட்சியை அணுகுவார். எவ்வாறாயினும், எந்தவொரு கட்சியும் அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அரசு ஜனாதிபதியின் ஆட்சிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News