காங்கிரஸ்-ஸின் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு!

காங்கிரஸ் தலைவவர் ராகுல் காந்தி சார்பில் கொடுக்கப்படவுள்ள இப்தார் விருந்தில் கலந்து கொள்ள மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jun 12, 2018, 11:16 AM IST
காங்கிரஸ்-ஸின் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு! title=

காங்கிரஸ் தலைவவர் ராகுல் காந்தி சார்பில் கொடுக்கப்படவுள்ள இப்தார் விருந்தில் கலந்து கொள்ள மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

இதையடுத்து, முன்னதாக மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், பிரணாப் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ள இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைக்கப்பட வில்லை என்ற செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் எழுப்பினர். 

இந்நிலையில், திடீரென காங்கிரஸ் மனம் மாறியது, இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய காங், செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கூறுகையில், நாங்கள் விடுத்த அழைப்பை பிரணாப் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

Trending News