பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (PoK) மீது பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அதற்கு சொந்தமில்லாத ஒரு பகுதியை சீனாவுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்த அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து தனக்கு கருத்து வேறுபாடு இல்லை எனவும், ஆனால் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த பிரச்சினையை 'கையாண்ட விதம்' அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாழன் அன்று அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸால் 'India in Crisis' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தாரூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அங்கு தரூர் பாகிஸ்தான் குறித்து இந்த பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்பு கூட, குறிப்பிடத்தக்க வகையில் சஷி தரூர் பாகிஸ்தானைக் கண்டித்தும், காஷ்மீர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் மோடி அரசாங்கத்துடன் இருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சி பிரதமர் மோடியிடம் இருப்பதாகவும், இந்த பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையை (ஐ.நா.) அடைந்தால், எதிர்க்கட்சியும் அவரை ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சஷி தரூர் தெரிவித்துள்ள இந்த கருத்து மோடி ஆட்சிக்கு மீண்டும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய சஷி தரூர், 'இந்தியாவின் உள் பிரச்சினைகளைப் பொருத்தவரை, பாகிஸ்தானுக்கு அதில் தலையிட உரிமை இல்லை, இந்தியாவுக்கு வெளியே, நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். காஷ்மீர் பிரச்சினையில் அரசாங்கத்தை நாம் விமர்சிக்க முடியும், ஏனெனில் இது எங்கள் உள் பிரச்சினை, ஆனால் இந்தியாவுக்கு வெளியே, நாங்கள் ஒன்று. நாங்கள் பாகிஸ்தானுக்கு ஒரு அங்குலம் கூட இடம், வாய்ப்பு கொடுக்க மாட்டோம். என தெரிவித்தார்.