புது டெல்லி: தேசத்துரோக வழக்கு சட்ட பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மறுபரிசீலனை செய்யும் வரை புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது எனவும் தீர்ப்பு. தேச துரோகச் சட்டத்தின் 124A பிரிவின் கீழ் எந்த வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம்:
ஐபிசியின் 124 ஏ பிரிவின் விதிகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். எவ்வாறாயினும், தேசத்துரோகச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை, மத்திய-மாநில அரசுகள் 124A பிரிவின் கீழ் எந்த வழக்கையும் பதிவு செய்யவோ அல்லது எந்த விசாரணையையும் நடத்தவோ கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம் என்றும் நீதிபதிகள் கூறினார்.
மேலும் படிக்க: ஷாகின்பக்கில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி..மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ஜூலை மாதம் விசாரணை நடைபெறும்:
தேச துரோக வழக்கை எதிர்கொண்டு சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்று தலைமை நீதிபதி கூறினார். இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேச துரோக சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அடுத்த விசாரணை ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
மூன்று நீதிபதிகள் அமர்வு:
தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கக்து.
மத்திய அரசு வாதம்:
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது. ஒவ்வொரு தேசத்துரோக வழக்கின் தீவிரத்தன்மையும் எங்களுக்குத் (மத்திய அரசுக்கு) தெரியாது என்று துஷார் மேத்தா கூறினார். அவர்களில் சிலர் பணமோசடி அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள். நிலுவையில் உள்ள தேச துரோக வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்றங்களை நாம் நம்ப வேண்டும். எனவே தேச துரோகச் சட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது. இந்த சட்டத்தை அரசியலமைப்பு பெஞ்ச் உறுதி செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் துஷார் மேத்தா வலியுறுத்தினார்.
மனுதாரர் தரப்பு வாதம்:
மனுதாரரின் தரப்பில் ஆஜாரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், தேச துரோக சட்டத்தை நிறுத்துமாறு நாங்கள் நீதிமன்றத்தில் கோரவில்லை. இந்த சட்டம் வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்றார். இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்ய காந்த், "இப்பிரச்சினைக்கு சரியான தீர்வைப் பற்றி பேசவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்றார்.
மேலும் படிக்க: தாஜ் மகாலுக்குள் இந்து சிலைகள்? கண்டுப்பிடிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR