ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு..!!

கிராமத்தில் பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 08:08 PM IST
  • கிராமத்தில் பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
  • மேலும் மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
  • இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது
ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு..!! title=

புதுடில்லி: பீம் ஆர்மித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கேட்டபடி   ‘Y security’ பாதுகாப்பு வழஙகவில்லை என்றாலும், ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்கார சமப்வத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரருக்கு இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலாளிகளும்  பாதுகாப்பிற்காக பனியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  குடும்பத்தினர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

குடும்பத்தின் “24 மணி நேர பாதுகாப்பு” க்காக 12-15 காவல் துறை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஹத்ராஸ் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!

கிராமத்தில் பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பீம் ஆர்மி, ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்தனர். மேலும் அக்குடும்பத்தினருக்கு அவர்களுக்கு  ‘Y security’ பாதுகாப்பு வழங்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கோரினர்.

மேலும் படிக்க | Hathras வழக்கில் கலவரத்தை தூண்ட எதிர் கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத்

20 வயதான தலித் பெண் செப்டம்பர் 14 ஆம் தேதி ஹத்ராஸில் நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகே இரவு அவர் தகனம் செய்யப்பட்டார். இரவில் தகனம் செய்ய உள்ளூர் காவல்துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர் இருப்பினும், தகனம் "குடும்பத்தின் விருப்பப்படி" மேற்கொள்ளப்பட்டது என உள்ளூர் காவல்துறை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. மேலும் பரிசோதனை அறிக்கைகளை மேற்கோள் காட்டி, கற்பழிப்பு குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.

ALSO READ | ஹத்ராஸ் விபத்து; பாதிக்கப்பட்டவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை: அலிகர் மருத்துவமனை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News