டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவர் வழக்கம் போல பரபரப்பாக இருக்கும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், இந்தூருக்கு செல்ல முன்பதிவு செய்து வந்துள்ளார். அவருக்குப் பயணச்சீட்டு கொடுக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறது இண்டிகோ.
அந்தப் பயணியும் இந்தூருக்குதான் செல்கிறோம் என நினைத்துக் கொண்டு ஜாலியாக சென்றிருக்கிறார். ஆனால் நாக்பூர் வந்துவிட்டது, தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் என பணிப்பெண் சொன்னபோதுதான் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
நான் இந்தூருக்கு போக வேண்டும், நாக்பூர் ஏன் கூட்டிட்டு வந்தீர்கள் என கேட்க, இது நாக்பூர் ஃபிளைட் என பயணிகள் அனைவரும் ஒருமித்தக் குரலில் கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்த அவரை, இண்டிகோ நிறுவன அதிகாரிகள் வந்து சந்தித்து, இந்தூருக்கு அனுப்பி வைப்பதாக கூறிய பின் மனிதர் சமாதானம் ஆகியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் இது நிகழ்ந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட பயணி மற்றும் அவரது உடமைகள் பத்திரமாக இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Regret security breach intercepted by IndiGo security staff on flight 6E774 (DEL-NAG), wherein a passenger of flight 6E 656 (DEL-IDR) wrongly boarded the flight 6E 774 and further traveled to Nagpur, after boarding wrong coach: IndiGo statement pic.twitter.com/Om4djUY9FE
— ANI (@ANI) January 15, 2018
Passenger's baggage was retrieved from flight 6E 656 and flight was released after performing last minute change. His baggage was later connected to IDR on 6E-733. Passenger has been connected to IDR from NAG on flight 6E 509: IndiGo
— ANI (@ANI) January 15, 2018
The security personnel involved ( security lead, second lead and skipper) have been taken off roaster till IndiGo's internal inquiry in the matter is completed: IndiGo
— ANI (@ANI) January 15, 2018