Train Accident: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 22850) ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் வண்டியின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை 5:31 மணியளவில், ரயில் நடுப் பாதையில் இருந்து கீழ்ப் பாதைக்கு மாறிக் கொண்டிருந்த போது, பி1 கோச் உட்பட இரண்டு பயணிகள் பெட்டிகள் மற்றும் ஒரு பார்சல் வேன் கோச் தடம் புரண்டன. தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
#WATCH | Howrah, West Bengal: A total of 3 coaches including one parcel van of the 22850 Secundrabad Shalimar SF Express derailed near Nalpur Station of the South Eastern Railway division. No casualties reported so far: CPRO South-Eastern Railway
(Visuals from the spot) pic.twitter.com/wxbvcSWG6O
— ANI (@ANI) November 9, 2024
ரயில் விபத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூர் நிலையங்களில் இருந்து விபத்து நிவாரண ரயில்கள் மற்றும் மருத்துவ உதவிகள் உடனடியாக அனுப்பப்பட்டன. "காலை 5:31 மணிக்கு, செகந்திராபாத்-ஷாலிமார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நடுப் பாதையில் இருந்து கீழ்ப்பாதைக்கு செல்லும் போது தடம் புரண்டது. ஒரு பார்சல் வேனும் இரண்டு பயணிகள் பெட்டிகளும் தடம் புரண்டன. பெரிய காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை," என்று சரண் கூறினார்.
பயணிகள் கொல்கத்தாவிற்கு தங்கள் பயணத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்த அதிகாரிகள் பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்தனர். ஓம் பிரகாஷ் சரண் கூறியது போல், தடம் புரண்ட இடத்திலிருந்து பயணிகளை அனுப்ப அவர்களின் இடங்களுக்கு உடனடியாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் படிக்க | பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர் மரணம் - பயணிகளின் உயிர்காத்த நடத்துநர்
கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பல இடங்களில் ரயில் விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றது. ரயில் விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 200 தொடர் ரயில் விபத்துகளில் 351 பேர் உயிரிழந்துள்ளனர், 970 பேர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய ரயில்வேயின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், இந்த சம்பவம் ரயில் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ