ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் (Manohar Lal Khattar) தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜூலை 16 முதல் மீண்டும் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. மறுபுறம், 6 முதல் 8 வரை வகுப்புகளுக்கு (classes 6 to 8) ஜூலை 23 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானா இயக்குநரகம் பள்ளி கல்வி (Haryana Directorate School Education) வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், "மாநிலத்தில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னரே பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவுப்படுத்தி உள்ளது. ஆனால் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அவை மீண்டும் திறக்கப்படுவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
"ஜூலை 16 முதல் 9 வரை 12 ஆம் வகுப்புகளுக்கு (classes 9 to 12) சமூக இடைவெளி உட்பட கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நிலைமை சரியாக இருந்தால், மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்" என்று ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் (Kanwar Pal) கூறியதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
ALSO READ | தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு
முன்னதாக வியாழக்கிழமை, முதலமைச்சர் கட்டார், "கோவிட் -19 நெறிமுறைகளை (COVID-19 protocols) கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மாநில அரசு ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்திருந்தார்."
"இப்போதைக்கு, COVID-19 பாதிப்பு நிலவரம் குறைந்துள்ளது. எனவே, விரைவில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், அதே வேளையில், COVID-19 விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது.
இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் ஹரியானாவில் மூடப்பட்டன. இருப்பினும், கடந்த சில நாட்களாக தினசரி COVID-19 தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அரசு கவனித்து வருகிறது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஹரியானாவில் தற்போது ஒரு நாள் தொற்றின் அளவு 1,000 க்கும் குறைவான வந்துள்ளது. அதே நேரத்தில் 7.58 லட்சம் நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையில், இறந்தவர்களின் எண்ணிக்கை ஹரியானாவில் 9,500 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR