சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சிக்கலானது : சித்தராமைய்யா

Last Updated : Sep 21, 2016, 12:59 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சிக்கலானது : சித்தராமைய்யா title=

காவிரியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு நாள்தோறும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, இப்போது வரை எங்களிடம் தண்ணீர் இல்லை. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது சிக்கலான விஷயம். இது அமல்படுத்த முடியாத உத்தரவு. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து ஆலோசிப்பதற்காக செப்டம்பர் 21 அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட உள்ளது. இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி ஆலோசிக்க உள்ளோம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சித்தராமைய்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News