சசி., முதல்வராக தடை கோரி அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

Last Updated : Feb 10, 2017, 11:19 AM IST
சசி., முதல்வராக தடை கோரி அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு title=

புதுடெல்லி: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
 
சசிகலா தமிழக முதல்வராக இடைகால தடை விதிக்க வேண்டும் என சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு சென்றனர். அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டது. அந்த வழக்கில் விடுதலையாகியுள்ள நிலையில் அதற்கான மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புள்ளது. 

சசிகலா முதல்வராக பதவியேற்று பின்பு சொத்துகுவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வரும் பட்சத்தில் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
 
இதனால் மீண்டும் தமிழகத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சொத்துகுவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு வரும் வரை சசிகலா முதல்வராக இடைகால தடை விதிக்க வேண்டும்'' என கோரப்பட்டது. 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மறுத்து விட்டார்.

Trending News