SBI வங்கியின் புத்தாண்டு பரிசு - விவரம் உள்ளே!

இந்த செயல்பாட்டின் மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளாது!

Last Updated : Jan 1, 2018, 06:12 PM IST
SBI வங்கியின் புத்தாண்டு பரிசு - விவரம் உள்ளே! title=

தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு அளிக்கும் வகையில் கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது SBI  வங்கி!

இதன்படி முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

  • தற்போது 8.95% உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65% சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70% -ல் இருந்து 13.40% -ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த செயல்பாட்டின் மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளாது!

Trending News