பிரசாரத் தடையை மீறியதாக பிரக்யா தாக்கூருக்கு EC நோட்டீஸ்!!

பிரக்யா தாக்கூர் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! 

Last Updated : May 5, 2019, 01:35 PM IST
பிரசாரத் தடையை மீறியதாக பிரக்யா தாக்கூருக்கு EC நோட்டீஸ்!! title=

பிரக்யா தாக்கூர் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! 

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்-கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்து தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம்  2 ஆம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு ( 72 மணி நேரம்) சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என தடை விதித்தது. கடந்த 2 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பிரக்யா தாக்கூர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் பிரக்யா தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

Trending News