Thane Crane Accident: மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கிரேன் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேர் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் மற்றும் பெரிய கட்டடங்களுக்கு அடித்தளம் அமைக்க பயன்படும் பெரிய இரும்பு கற்றைகள் அல்லது கர்டர்களை நகர்த்தக்கூடிய ஒரு சிறப்பு கிரேன் இயந்திரத்தை தொழிலாளர்கள் இயக்கி வந்தனர்.
#WATCH | Maharashtra: A total of 16 bodies have been recovered so far and three injured reported. Rescue and search operation underway: NDRF pic.twitter.com/nliOMW9pv6
— ANI (@ANI) August 1, 2023
அந்த வகையில், இன்று அதிகாலை ஷாபூரின் சர்லாம்பே கிராமத்திற்கு அருகில் சம்ருத்தி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் பிற அவசர சேவைகள் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்ருத்தி விரைவு நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஷாஹ்பூர் போலீஸார் தெரிவித்தனர். சம்ருத்தி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்டத்தை அமைப்பதில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், செவ்வாய்கிழமை அதிகாலையில் ஷாபூரின் சர்லாம்பே கிராமத்திற்கு அருகே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்தது. அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக, போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் பிற மீட்பு சேவைகளுடன் இணைந்து தற்போது மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#UPDATE | Maharashtra: Two NDRF teams are working at the site after a crane fell on the slab of a bridge in Shahapur tehsil of Thane district. Till now 14 dead bodies have been retrieved and 3 have been injured. Another six are feared to be trapped inside the collapsed… https://t.co/3QiIuUwoIP pic.twitter.com/tptIFDfAfb
— ANI (@ANI) August 1, 2023
மும்பை - நாக்பூர் விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் 701 கிலோமீட்டர் நீளமுள்ள சம்ருத்தி மகாமார்க் இரண்டு நகரங்களையும் இணைக்கும் ஒரு பெரிய நெடுஞ்சாலையாகும். மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) விரைவுச் சாலையின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது, இதன் முதல் கட்டம், நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த விரைவுச்சாலை திறந்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | திருமணம் ஆன 5 நாட்களில் புதுமண ஜோடி மரணம்..! என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ