சீனாவின் திறமையால் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது -ஜெய்சங்கர்

S Jaishankar Talk About Indian Economy: இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனாவின் செயல்திறனை நம்பியிருக்க முடியாது என்றும், உற்பத்தித் துறைக்கு வலுவான உள்நாட்டு விற்பனையாளர் சங்கிலிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 11, 2023, 11:17 AM IST
  • சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை திட்டமிட முடியாது
  • நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க விற்பனையாளர் சங்கிலியை அமைக்க வேண்டும்.
  • லாபம் ஈட்ட நம் நாட்டில் பிறர் தொழிலுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,
சீனாவின் திறமையால் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது -ஜெய்சங்கர் title=

India's Growth Can't Be Built on Chinese Efficiency: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடான சீனாவை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை மேற்கோள்காட்டி உள்ளார். இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் எழுதிய ‘மேட் இன் இந்தியா: 75 இயர்ஸ் ஆஃப் பிசினஸ் அண்ட் எண்டர்பிரைஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசும் போது, சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை திட்டமிட முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு வலுவாக மாற்ற உள்நாட்டு விற்பனையாளர் சங்கிலியை உருவாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்று நாம் அன்றாடமும் பயன்படுத்தும் பல பொருட்கள் சீனாவின் தயாரிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருளாக இருந்தாலும் சரி, லேப்டாப்பாக இருந்தாலும் சரி, சின்ன பல்பாக இருந்தாலும் சரி, தெருவில் இருந்து வீட்டில் போதும் சோபா வரை சீனாவில் தயாரிக்கப்பட்ட பளபளப்பான படைப்புகளையும் நீங்கள் காணலாம். என்ன ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறாய் எனக் கேட்டால் இதுவா சீனா மாடல் என்ற பேச்சு அடிக்கடி நம் நாட்டில் பலர் கூறுவதைக் கேட்பது உண்டு. என்னப்பா எங்க பார்த்தாலும் சீனா மாடல், சீனா மாடல் தயாரிப்பே இருக்கிறது. நம்ம நாட்டுல இதுபோல பொருட்களை தயாரிக்க முடியாதா என சிலர் கேள்விகளை எழுப்புகிறார்கள், சிலர் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். 

மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீருக்கு பிறகு ராஜஸ்தானில் லித்தியம் புதையல்! பதற்றத்தில் சீனா!

இவ்வாறான நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். 

அமிதாப் காந்த் எழுதிய ‘மேட் இன் இந்தியா: 75 இயர்ஸ் ஆஃப் பிசினஸ் அண்ட் எண்டர்பிரைஸ்’ புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஜெய்சங்கர், சீனாவைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். நாம் 'சீனாவைத் தீர்வுக்காகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நமது பொருளாதாரத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால், உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க விற்பனையாளர் சங்கிலியை நாட்டில் அமைக்க வேண்டும்.  உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை எனப்படும் பிஎல்ஐ திட்டத்தின் நோக்கம் நாட்டில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மாறிய சூழ்நிலையிலிருந்து பயனடைய இந்தியா உற்பத்தியில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார். உலகளாவிய சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது வளர்ச்சி உத்தி மற்றும் உள்நாட்டு தீர்வுகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார். கோவிட் காலத்தின் அனுபவங்கள் மற்றும் அதைச் சமாளிக்க பின்பற்றப்பட்ட உத்திகளின் உதாரணங்களையும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

உற்பத்தித் துறையை வலுப்படுத்தாமல் உலக அளவில் எந்த ஒரு நாடும் வளர்ச்சியை அடையாது என்று கூறினார். ஒவ்வொரு நாடும் அதன் உற்பத்தியாளர்களையும் அதன் வணிகங்களையும் ஆதரிக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். லாபம் ஈட்ட நம் நாட்டில் பிறர் தொழிலுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது. 

நாம் பொருளாதாரத்தை மூலோபாய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் மற்றும் சரியான பங்காளியை (நமது நாட்டு உற்பத்தியாளர்) அடையாளம் காண வேண்டும் என்று கூறினார். மேக் இன் இந்தியா என்பது பொருளாதாரத் திட்டமோ, உற்பத்தித் திட்டமோ அல்ல. நான் அதை மூலோபாயமாகக் கருதுகிறேன் என்றார்.

மேலும் படிக்க: பற்றி எரியும் பாகிஸ்தான்... பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு... இணைய சேவைகள் முடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News