பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பதவி விலகிய IAS அதிகாரி!

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த IAS அதிகாரி ஷா பைசல் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்!

Last Updated : Jan 12, 2019, 09:59 AM IST
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பதவி விலகிய IAS அதிகாரி! title=

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த IAS அதிகாரி ஷா பைசல் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்!

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த IAS அதிகாரி ஷா பைசல். 35 வயதான இவர், கடந்த 2009-ஆம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர். 

காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவதற்கும், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். 

இந்நிலையில் ஷா பைசல் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் ஷா, எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என தெரிவித்துள்ளார். பிரிவினைவாத ஹூரியத் மாநாடு இயக்கத்தில் தனது ஆட்சிப்பணி அனுபவம் பயன்படாது என்பதால், அதில் சேர மாட்டேன் எனவும் ஷா பைசல் குறிப்பிட்டுள்ளார்.

Trending News