ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களின்படி, அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப உங்களுக்கு ரேஷன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், புதிதாக திருமணமான ஒருவர் உங்கள் குடும்பத்தில் சேர்ந்திருந்தால் அல்லது உங்கள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், நீங்கள் ரேஷன் கார்டில் அவரது பெயரை சேர்க்க வேண்டும். எனவே ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான முழுமையான ஆன்லைன் செயல்முறையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க ஆன்லைன் வழி
1. இதற்கு ரேஷன் கார்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதற்குப் பிறகு நீங்கள் போர்ட்டலில் ஒரு கணக்கை உருவாக்குவதன் மூலம் லாகின் செய்ய வேண்டும்.
3.பிறகு புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்க்கும் விருப்பம் கிடைக்கும், அந்த விருப்பத்தை கிளிக் செய்யவும்.
4. இப்போது ஒரு விண்ணப்பப் படிவம் திறக்கும், அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
5. இப்போது நீங்கள் கேட்ட சில ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்.
6. படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
7. நீங்கள் ஒரு குறியீட்டைப் பெறுவீர்கள், அதில் இருந்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அடுத்த 15 நாட்களில் நல்ல செய்தி!
இந்த செயல்முறை முடிந்த ஒரு மாதத்திற்குள், உங்கள் ரேஷன் கார்டு தபால் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், உங்களிடம் இந்த ஆவணங்கள் இருக்க வேண்டும்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கு தேவையான ஆவணங்கள்
ஒரிஜினல் ரேஷன் கார்டு
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
பெற்றோரின் அடையாளச் சான்று
குடும்பத்தில் புதிய மருமகளின் பெயரை சேர்ப்பதற்கு தேவையான ஆவணங்கள்
திருமண சான்றிதழ்
கணவரின் ஒரிஜினல் ரேஷன் கார்டு
பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்றிதழ்
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ