8 நாள் பயணமாக ஐரோப்ப நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் இன்று செக் குடியரசு நாட்டினை அடைந்துள்ளார!
சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 2-ஆம் நாள் காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு புறப்பட்டார்.
இந்த பயணத்தில் இவர் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பொருளாதார அடிப்படையிலான விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடுத்துகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Prague: President Ram Nath Kovind and his wife Savita Kovind arrive in Czech Republic on the final leg of their visit to three European countries - Cyprus, Bulgaria and Czech Republic. pic.twitter.com/jRctyt4DKe
— ANI (@ANI) September 6, 2018
இந்த பயண திட்டத்தின் படி செப்டம்பர் 2 முதல் 4 வரை சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற அவர் அந்நாட்டு அதிபர் நிகோசை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செப்டம்பர் 4 முதல் 6 வரை பல்கேரியா பயணம் மேற்கொண்ட அவர் இதைத்தொடர்ந்து அவர் செக் குடியரசில் தனது சுற்று பயணத்தினை நிறைவு செய்கிறார். அங்கு வர்த்தக கூட்டம் ஒன்றிலும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று தன் மனைவி சவித்தா கோவிந்த் அவர்களுடன் குடியரசுத் தலைவர் செக் குடியரசினை சென்று அடைந்துள்ளார்.