ஜாமினில் வெளி வந்தவர்களிடம் ராஜஸ்தானை கொடுப்பதா?... மோடி!

ஒரு தேநீர் விற்பனையாளர் காந்தி குடும்பத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துவிட்டான் என என் மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 5, 2018, 02:07 PM IST
ஜாமினில் வெளி வந்தவர்களிடம் ராஜஸ்தானை கொடுப்பதா?... மோடி! title=

ஜெய்பூர்: ஒரு தேநீர் விற்பனையாளர் காந்தி குடும்பத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துவிட்டான் என என் மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடையும் நிலையில் இன்று சுமெர்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ஜாமினில் வெளி வந்தவர்களிடன் ராஜஸ்தானை விட்டுகொடுத்து விட கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய் அன்று 'நேஷ்னல் ஹெரால்ட் செய்தித்தாள் தொடர்பான 2011-12-க்கான வரித்தணிக்கை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் மீது விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'. இவ்வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ராகுல், சோனியா காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது. எனவை பிரதமர் மோடியின் உரை இந்த நிகழ்வை மேற்கொள் காட்டிய கூறப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்... கடந்த 70 ஆண்டுகளில் சமூதாயத்தினை பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளது காங்கிரஸ். அப்படியிருக்கையில் அக்கட்சி எப்படி மக்களின் நலனை விரும்பும் கட்சி என ஏற்றுக்கொள்ள முடியும். பிரச்சார கூட்டங்களில் பாஜக-வினை விமர்சித்து வரும் காங்கிரஸ், 70 ஆண்டுகளில் தாங்கள் என்ன செய்தனர் என பட்டியலிட்டுவிட்டு பாஜக-வின் 4.5 ஆண்டுகள் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்பட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்த மோடி., ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறுவது பெரிதல்ல, ராஜஸ்தானின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றிப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தான் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவில்லை எனவும், சாதரன குடிமக்களின் அங்கத்தில் ஒருவன் எனவும் அவர் தன்னை குறிப்பிட்டுக்கொண்டுள்ளார்.

200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேரத்தல் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 11-ஆம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News