ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்த தினம்: தலைவர்கள் அஞ்சலி...!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் - ராகுல் மற்றும்  சோனியா காந்தி மரியாதை..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2018, 10:02 AM IST
ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்த தினம்: தலைவர்கள் அஞ்சலி...!  title=

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் - ராகுல் மற்றும்  சோனியா காந்தி மரியாதை..! 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இவர் இந்தியபிரதமர் ஆனார்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும் இவர் அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இவரது பிறந்தலானால இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் ராஜீவ் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி எம்பிக்கள், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட மேலும் பலர் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

Trending News