மிஷன் சக்தி சாதனையில் பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்து மறைமுகமாய் தாக்கும் ராகுல் காந்தி!!
இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தான் ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர் மக்களிடம் உரையாற்றினார். அதில், விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைகோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனையில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. உலகில் மிக முக்கியமான மூன்று நாடுகள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
மிஷன் சக்தி என்ற இந்தச் சோதனை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டது. 300 கி மீட்டர் தொலைவில் சென்று தாக்கக் கூடிய ஒரு சோதனையில் இந்தியா விண்வெளியில் சாதித்துள்ள இந்தச் சோதனைக்கு LEO என்று பெயர் என சுட்டிக்காட்டினார். அதாவது லோ எர்த் ஆர்பிட் என்பது இதன் விரிவாக்கம். இது லைவ் சேட்டிலைட்டை அடித்து வீழ்த்துயுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர வேறு எந்த நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினர். விண்வெளியில் இந்தியா பெரிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சோதனை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் அவர் கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துகள் DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு). உங்களது பணியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இத்துடன், பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்றும் ராகுல் காந்தி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
Rahul lauds DRDO for success of 'Mission Shakti' but wishes PM Modi happy 'World Theatre Day'
Read @ANI Story | https://t.co/ZRTeHUGVPm pic.twitter.com/0CkPjTHzGE
— ANI Digital (@ani_digital) March 27, 2019