புதுடெல்லி: ராகுல் காந்தியின் டிவிட்டர் ஹாக் செய்த நபரிடமிருந்து டெல்லி துணை கமிஷ்னர் சைபர் கிரைமுக்கு இன்று பதில் வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த டிவிட்டர் ஹாக்கிங் ஐந்து நாடுகளிலிருந்து செயல் படுவதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து டெல்லி துணை கமிஷ்னர் (சைபர் கிரைம்) அன்யுஷ் ராய் கூறுகையில், ஸ்வீடன், ரோமானியா, அமெரிக்கா, கனடா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ராகுலின் டிவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கிங் செய்த நபர்களின் ஐ.பி., முகவரியை டுவிட்டர் நிறுவனம் இ - மெயில் மூலம் அனுப்பியுள்ளது. அதனை கொண்டு குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
கடந்த நவம்பர் 30-ம் தேதி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டு, அதில் ராகுலையும், அவரின் குடும்பத்தினரையும் குறிவைத்து ஆபாச வார்த்தைகளால் மர்மநபர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு இரவு 8:45 மணிக்கு ஹாக் செய்யப்பட்டது. ஹாக் செய்ய பட்ட சிறிது நேரத்தில் அவரை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றிவும் கீழ் தனமான வார்த்தைகளால் அதில் பதிவு செய்யப்பட்டது. அனால் அந்த பதிவு விரைவில் நீக்கப்பட்டது.
தற்போது ராகுல் காந்தியின் டிவிட்டர் பகத்தின் பெயர் (@OfficeOfRG) என்று மற்றம் செய்யப்பட்டுள்ளது.