தாமதிக்காமல் உடனே புதிய காங்., தலைவரை தேர்வு செய்யக: ராகுல்

நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாட்கள் தொடர முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய தகவல்!!

Last Updated : Jul 3, 2019, 03:13 PM IST
தாமதிக்காமல் உடனே புதிய காங்., தலைவரை தேர்வு செய்யக: ராகுல் title=

நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாட்கள் தொடர முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய தகவல்!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தாமாக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுலின் முடிவை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்காத நிலையிலும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா குறித்து கூறுகையில், ‘நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும் கூறினார்.

"கட்சி (காங்கிரஸ்) புதிய ஜனாதிபதியை மேலும் தாமதமின்றி விரைவாக முடிவு செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில் நான் எங்கும் இல்லை. நான் ஏற்கனவே எனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளேன், நான் இனி கட்சித் தலைவராக இல்லை" என்று ராகுல் காந்தி புதன்கிழமை புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், உடனடியாக CWC கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை முடிவு செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்று கூறினார்.

மக்களவை தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறனை ஆய்வு செய்ய அழைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு (CWC) மே 25 கூட்டத்தில் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார், தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டும் வென்றது.

தலைவர் பதிவியில் இருந்து விலகுவதற்கான தனது வாய்ப்பை CWC ஏகமனதாக நிராகரித்தது, ஆனால் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

Trending News