Indira Gandhi Death Anniversary : இந்தியாவின் ஒரே ஒரு பெண் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி அவரின் இரு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும், டெல்லி இந்தியா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தற்போது, இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"பாட்டி, உங்களின் அன்பையும், மதிப்பையும் எனது மனதில் சுமக்கிறேன். ஒருபோதும், எந்த இந்தியாவுக்காக உங்கள் உயிரை தியாகம் செய்தீர்களோ, அதை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022
மேலும் ட்விட்டரில் மல்லிகார்ஜுன கார்கே,"இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது அஞ்சலிகள். விவசாயம், பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"வங்கதேச விடுதலை, பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தது, நாட்டின் கடினமான காலங்களிலும், சுமுகமான நேரங்களிலும் வழிநடத்தியது போன்ற பெருமைக்குரியவர் இந்திரா காந்தி" என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Congress President Shri @kharge, CPP Chairperson Smt. Sonia Gandhi Ji & other senior members paid floral tributes on the 38th anniversary of the martyrdom of Indira Gandhi Ji at Shakti Sthal, New Delhi. pic.twitter.com/ZMeNGt8HK7
— Congress (@INCIndia) October 31, 2022
இந்திரா காந்தி 1966 - 1977ஆம் ஆண்டு வரையும் பின்னர், 1980 - 1984ஆம் ஆண்டு வரையும் பிரதமராக இருந்தார். இடையில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், தோல்வியடைந்து மூன்று ஆண்டுகள் பதவியை இழந்தார். பின்னர், 1980ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Crude Oil Price: அதிகரித்தது க்ரூட் ஆயில் விலைகள்! பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ