Rahul Gandhi, Nirmala Sitharaman halwa photo : நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசினார். அப்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய அவர், பட்ஜெட் தயாரிப்பின்போது நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டினார். அதற்கு முன்பாகவே, மக்களவை சபாநாயகர், எந்த புகைப்படத்தையும்காட்டக்கூடாது என ராகுல்காந்தியிடம் தெரிவிக்க, மக்களவை தொலைக்காட்சியும் ராகுல்காந்தியை காட்டாமல் சபாநாயகரையே காட்டியது. அப்போது, பேசிய ராகுல்காந்தி, ‘சார்... நான் என்ன புகைப்படத்தை காட்டப்போகிறேன் என்று பார்க்காமலேயே, அந்த புகைப்படத்தை காட்ட அனுமதி மறுக்கிறீர்கள், தொலைக்காட்சியிலும் என்னை ஆப் செய்துவிட்டார்கள் என கூறினார்.
பின்னர் மக்களவை தொலைக்காட்சி ராகுல்காந்தியை மீண்டும் காண்பித்த நொடியில் அவர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை டக்கென காட்டினார். அப்போதும், ராகுல்காந்தியை உடனடியாக கட்செய்து சபாநாயகர் ஓம்பிர்லாவை காட்டியது லோக்சபா டிவி. அதற்கு உடனே, சார் என்னை டிவியில் கட்செய்துவிட்டார்கள் நீங்களே பாருங்கள் என கிண்டலாக கூறிய ராகுல்காந்தி, சிவன் புகைப்படத்தை காண்பிக்கவும் அனுமதி மறுக்கிறார்கள், நிர்மலா சீதாராமன் புகைப்படத்தையும் காட்ட அனுமதி மறுக்கிறார்கள் என கிண்டலாக கூறியபடியே, அந்த புகைப்படத்தை மீண்டும் காட்டி கீழே வைத்தார்.
இதனை எதிர்வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமன், முகத்தை கைகளைக் கொண்டு மறைத்தபடி சிரிக்க, அவைக்குள் இருந்த மற்ற எம்பிக்களும் சிரித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பதற்காக 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர். இந்த புகைப்படத்தில் பாருங்கள், பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் கூட பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் என ஒருவரும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் அல்வா, நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, "இன்று பார்லிமென்டில், ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை நான் எழுப்பிய போது, இந்த தீவிரமான பிரச்னையை, நிதியமைச்சர் கேலி செய்து சிரிக்கிறார். நாட்டின் 90% மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு பதில், பாஜகவின் நோக்கங்களையும், எண்ணங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. எந்த விலையிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உண்மையாக்கி, தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் என்பதை பா.ஜ.க.வுக்குச் சொல்ல விரும்புகிறேன்" என ஆவேசமாக பேசினார்.
மேலும் படிக்க | அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்! தேர்தலில் போட்டியிட உள்ளார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ