முடிந்தால் செய்து காட்டுங்கள்!! பிரதமர் மோடிக்கு சவால் விட்ட ராகுல் காந்தி

ரபேல் போர் விமானங்களை வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு சவால் விட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2018, 04:06 PM IST
முடிந்தால் செய்து காட்டுங்கள்!! பிரதமர் மோடிக்கு சவால் விட்ட ராகுல் காந்தி title=

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியது, 

இந்தியாவும் பிரான்ஸும் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன, அதனால் ரஃபேல் விமானங்களின் விலையை வெளிப்படுத்த முடியாது. இது நாட்டின் பாதுகாப்பு சமந்தப்பட்ட விசியம் என நிர்மலா சீதாராம கூறியிருந்தார். ஆனால் நான் பிரான்ஸ் அதிபரிடம் இது உண்மையா என்று கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் உடன்படிக்கை தொடர்பாக பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களிடம் பொய் சொல்லி வருகிறார் என குற்றம் சாட்டினார். ரூ. 540 கோடிக்கு இருந்த ஒப்பந்தம் எப்படி ரூ. 1600 கோடி மாறியது என நான் பிரதமரிடம் கேட்டேன். ஆனால் அவரிடமும் அதற்க்கு பதில் இல்லை.

 

2 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று மோடி கூறினார். ஆனால் தற்போது பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கும் அவர்கள் கேஸ் (சமையல் எரிவாயு) குடுக்க மாட்டார்கள். நீங்கள் தயாரித்துக்கொள்ள வேண்டும். 

 

இந்த மேடையில் நான் பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன். கர்நாடக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. உங்களுக்கும் சவால், முடிந்தால் 50 சதவீதம் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துக் காட்டுங்கள் 56 அங்குல மார்பு கொண்ட உங்களுக்கு நான் தைரியம் தருகிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

இன்று கர்நாடக மாநிலத்தின் பிடார் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Trending News