ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு விஜயவாடாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று சொந்த ஊரான ஐதராபாத் திரும்பினார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். வரவேற்பு நிகழ்ச்சியில் சிந்துவின் பெற்றோர் மற்றும் தெலுங்கானா துணை முதல்-மந்திரி முகமது மக்முத் அலி மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பி.வி.சிந்துவுக்கு இன்று பாராட்டுவிழா நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோ விஜயவாடா வந்தடைந்தனர். இவர்களுக்கு சாலையின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் நின்று பி.வி.சிந்துவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க சிந்துவை உற்சாகமாக வரவேற்றனர்.
#Rio2016 Silver medallist #PVSindhu's road show from Gannavaram Airport (Vijayawada, AP) to Indira Gandhi Stadium pic.twitter.com/akeZKxyKL7
— ANI (@ANI_news) August 23, 2016
Vijayawada (AP): Preparations for welcome ceremony for #Rio2016 Silver medallist #PVSindhu pic.twitter.com/QOotCJuiUf
— ANI (@ANI_news) August 23, 2016
#ExpectToday PV Sindhu to hold a road show from Gannavaram Airport (Vijayawada, Andhra Pradesh) to Indira Gandhi Stadium, Vijayawada.
— ANI (@ANI_news) August 23, 2016