பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பகவந்த் மன் முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அது மட்டுமின்றி, பதவியேற்ற முதல் நாளிலிருந்தே அவர், ஊழலுக்கு எதிரான தீர்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பகவந்த் மன் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை இலாகா பொறுப்பை பெற்றிருந்த விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட முதலமைச்சர் பகவந்த் மன், விஜய் சிங்லாமீதான ஊழல் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, விஜய் சிங்லா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் மீதே பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி கட்சியின் தலைமைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ”என்னைக் கொல்ல சதி” - நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்கலில் ஆம்ஆத்மி நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது. மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும், நாட்டு மக்களின் பலரும் மாற்று காட்சி ஒன்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என முனு முனுத்து வருகின்றனர்.
பாஜகவின் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியையும் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற வாதங்களே அரசியல் விவாதங்களில் சூடு பிடித்து வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சபர் மம்தா பானர்ஜி மத்தியில் மாற்று காட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற கருத்தை துணிச்சலோடு முன்மொளிந்திருந்தார்.
இதற்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளை தக்க வைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே காங்கிரஸால் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரம் பாஜகவுக்கு பயத்தை ஊட்டும் விதமாக ஆம்ஆத்மி பல்வேறு மாநிலங்களில் கால் பதித்து வருகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு இடையில்தான் பாஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மன், தனது அமைச்சரவையில் இருந்த விஜய் சிங்லா மீது மேற்கொண்டுள்ள ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மக்களால் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற தூய்மையான அரசியலையே மக்கள் விரும்புவதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR